மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி முகாம்கள் : சென்னை ஐகோர்ட் உத்தரவு
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி முகாம்களை நடத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.;
சென்னை : மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி முகாம்களை நடத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தக் கோரி தனியார் அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணனைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்ததாவது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி முகாமை நடத்த வேண்டும்.
இதற்காக பூந்தமல்லியில் உள்ள 10.5 ஏக்கர் மறுவாழ்வு மையத்தை பராமரித்து முகாமுக்கு பயன்படுத்தலாம் என அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில்,கடந்த ஒரு மாதமாக மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.