பாரதிய ஜனதா அரசின் அணுகுமுறை தவறானது : வைகோ
பாகிஸ்தான், பங்களாதேஷ்யில் இருந்து வருபவர்களுக்கு குடியுரிமை அளிப்பதில் மத்திய அரசின் அணுகுமுறை தவறானது என வைகோ குற்றம்சாட்டினார்.;
பெரியார் நினைவு தினத்தையொட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
தந்தை பெரியாரின் 48 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை வேப்பரியில் உள்ள பெரியார் திடலில் உள்ள நினைவிடத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது:
இந்தியா முழுவதும் மீண்டும் நான்கு வர்ண வட ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு பலரும் முயற்சிக்கும் நேரத்தில் அதை எதிர்க்கின்ற களமாக தமிழகம் தந்தை பெரியாரின் பூமியான அவரின் பெரியாரின் உறுதி மொழிகளை மீண்டும் ஏற்று அதனை முறியடிப்போம் என தெரிவித்தார்.
பாகிஸ்தான், பங்காளாதேஷ்யில் இருந்து வருபவர்களுக்கு குடியுரிமை அளிப்பதில் மத்திய அரசின் அணுகுமுறை தவறு. இலங்கையில் இருந்து வருபவர்கள் இடம் கொடுக்கிறார்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. மத்திய அரசின் அடாவடி, அராஜகமான போக்கு வருனாசுமிரத்தை மீண்டும் நிலைநாட்டும் முயற்சி என குற்றம் சாட்டினார்.
அவர்களின் குரல் பலமாக ஒலித்து கொண்டு இருக்கிறது. குரல்வளைகள் நெறிக்கவில்லை. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவர்கள் விஷத்தை கக்குகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.