கோவையில் ரயில் பயணி தவறவிட்ட சூட்கேஸ் பெரம்பூரில் மீட்பு
சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி விட்டுச் சென்ற சூட்கேஸ், பெரம்பூர் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார், வயது 59. இவர் குடும்பத்தினருடன் கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ரயிலில் பயணம் செய்தார். காட்பாடியில் இறங்கி ராணிப்பேட்டை சென்று விட்டார்.அதன்பின், நகைகள் வைத்திருந்த சூட்கேசை ரயிலில் மறந்து விட்டு வந்தது தெரிந்தது. உடனடியாக காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
ரயில், காட்பாடிக்கு அடுத்ததாக பெரம்பூரில் தான் நிற்கும் என்பதால், பெரம்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரம்பூரில் ரயில்வே போலீசார் அந்த பெட்டியில் சோதனை செய்த போது சூட்கேஸ் இருந்தது. அதில் மோதிரம், கம்மல் உட்பட 1 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் இருந்தன. சம்பந்தப்பட்ட பயணிக்கு தகவல் அளித்து, சென்னை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தனர்.