புரசைவாக்கத்தில் மெட்ரோ ரயில் கனவு சுரங்கப்பாதை அமைக்கும் பணி தீவிரம்
புரசைவாக்கத்தில் மெட்ரோ ரயில் கனவு சுரங்கப்பாதை அமைப்பதற்கான சாலையில் அதிர்வுகள் கண்டறியும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னையில் இரண்டு வழி பாதைகளை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக, 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைக்கான பணிகள் தொடங்கியுள்ளது.
குறிப்பாக மூன்றாவது வழித்தடமான மாதவரம் சிறுசேரி சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் பயனாக மாதவரம், பெரம்பூர் அயனாவரம், புரசைவாக்கம் நுங்கம்பாக்கம் ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை, அடையாறு, திருவான்மையூர், பெருங்குடி, செம்மஞ்சேரி, சிறுசேரி சிப்காட் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
மாதவரம் சிறுசேரி வழித்தட பாதையில் பணிகள் முடிந்ததும் 2026-ல் ரயில்களை ஓட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு டிரைவர் இல்லாமல் இயங்கும் வசதி மூலம் மெட்ரோ ட்ரெயின் ஓட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு மெட்ரோ ரயிலிலும் அதிநவீன சாப்ட்வேர் மட்டும் சிக்னல் வசதி 16 கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
இதற்காக 254 நவீன மெட்ரோ ரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது இந்த வழித்தட பாதையில் தினசரி 45 லட்சம் பயணிகள் பயணம் செய்வார்கள்.