பிரதமர் வருகையை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: பாஜக தலைவர் அண்ணாமலை

பிரதமரின் வருகையை தமிழக அரசு உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-20 02:19 GMT

சென்னை பட்டாளத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை.

சென்னை பட்டாளத்தில் உள்ள தனியார் திருமண மஹாலில் சிவசேனா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, டி.ஜி.பி தான் காவல்துறையின் தலைவர். அவர் தான் ஆளும் கட்சி அமைச்சர்களை தலையீடு செய்ய வேண்டாம் என சொல்ல முடியும். டி.ஜி.பி நேர்மையாக நடுநிலையாக செயல்பட வேண்டும். தமிழக டி.ஜி.பியை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ய வில்லை.

திமுக.,காரர்கள் சமூக வளைதளத்தில் போட்ட பதிவையும், பா.ஜ.க போட்ட பதிவையும் பாருங்கள், பா.ஜ.க. மீது மட்டுமே வழக்கு போட்டுள்ளனர். தராசுக்கு சமாக இருக்க வேண்டிய காவல்துறை, சில இடங்களில் சமமாக இல்லை என்பது அவருக்கே ( டி.ஜி.பி) தெரியும்.

மாங்காடு மாணவி தற்கொலை கடித்தத்தில் கருவறையும் கல்லறையும் தான் பாதுகாப்பு என்று எழுதி இருக்கிறார். இது மன வேதனையை அளிக்கிறது. ஆளும் கட்சி தலையீடு எல்லா இடத்திலும் இருக்கிறது.

திமுக மாவட்ட செயலாளர், வட்ட செயலாளர் காவல்துறை வேலையில் தலையிடுகின்றனர். இதனால் தான் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளது. கே.எஸ்.அழகிரி போராட்டம் என அழைத்தால் பத்து பேர் தான் வருவார்கள் பல் இல்லாத பாம்பாக கே.எஸ். அழகிரி கட்சியில் இருக்கிறார்.

கேரளாவில் 266 பா.ஜ.க தொண்டர்கள் இறந்துள்ளனர். அதில் கன்னூரில் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். கம்யுனிஸ்ட் அடக்குமுறையை விட்டுவிட வேண்டும் கேரள முதல்வர் தான் இதற்கு முழு பொறுப்பு திமுக வினர் #GoBackModi என்றனர். தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் கேட்ட நேரத்திலேயே பிரதமர் அவர்களை சந்தித்தார் பிரதமர் அரசியல் கட்சியை பார்க்க மாட்டார்.

முதல்வரும், அமைச்சர்களும் பிரதமரின் வருகையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மத்திய அரசு திட்டங்களை பயன்படுத்தி தமிழகம் அடுத்த கட்ட நாகர்வுக்கு  செல்ல முதல்வர் வேலை செய்வார் என நம்புகிறோம்.

ஒமிக்ரான் காரணம் காட்டி கிரிவலம் நடப்படாது என்றால் அதை ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News