ஆசியா மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 வயது சிறுவன்

சென்னையை சேர்ந்த 4 வயது சிறுவன் ஆசியா மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.;

Update: 2021-10-04 16:41 GMT

4  வயது சாதனை சிறுவன் தனஞ்ஜெய் செல்வன்.

சென்னையை சேர்ந்த தன்ஞ்ஜெய் செல்வன் என்ற 4 வயது சிறுவன் ஆசிய மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் தனக்கான தடத்தை பதித்து உள்ளார்..

உலக நாடுகளில் 100 நாடுகளின் தேசியக் கொடியை பார்த்து அந்த நாடுகளின் பெயரையும் அந்த நாட்டினுடைய நீர்வாழ் உயிரினங்களின் பெயரையும் 3 நிமிடம் நாற்பத்தி ஆறு நொடிகளில் கூறி இந்தியா மற்றும் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக அந்தந்த நாடுகளின் தேசியக்கொடிகளை பார்த்து நாட்டினுடைய பெயரை மட்டுமே சொல்லி பல குழந்தைகள் சாதனை புரிந்துள்ளனர்.

ஆனால் நான்கு வயது சிறுவன் 100 நாடுகளின் கொடியை பார்த்து அந்த நாடுகளின் பெயரை சரியாக சொல்லியும் அந்த நாட்டினுடைய நீர்வாழ் உயிரினங்களின் பெயர்களையும் கூறி சாதனை படைப்பது இதுவே முதன்முறை ஆகும்.

இந்த நிகழ்ச்சியில் ஏ. கே. விஸ்வநாதன்  கலந்து கொண்டு சாதனை படைத்த சிறுவனை வாழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News