சென்னையில் போக்குவரத்து சிக்னல்கள் செயல்படும்: காவல் ஆணையர் அறிவிப்பு!

சென்னையில் இன்று முதல் போக்குவரத்து சிக்னல்கள் செயல்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

Update: 2021-06-08 04:23 GMT

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இன்று முதல் அனைத்து சிக்னல்களும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக வடபழனியில் வாகன தணிக்கைகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் போக்குவரத்து அதிகமாகி விட்டது. ஆகவே அதனைக் கட்டுபடுத்த இன்று முதல் அனைத்து சிக்னல்களும் சென்னையில் நடைமுறைபடுத்தப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News