சென்னையில் மதுபாட்டில்களை டோர் டெலிவரி செய்த ஜொமோட்டோ ஊழியர் கைது!

சென்னையில் மதுபாட்டில்களை வீடுகளுக்கு டெலிவரி செய்த ஜொமோட்டோ ஊழியர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-05-27 06:18 GMT

சென்னையில் மதுபான பாட்டில்களை டோர் டெலிவரி செய்து வந்த Zomato ஊழியர் பிரசன்ன வெங்கடேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் நியூஆவடி சாலை- கேஜி ரோடு சந்திப்பில் போலீசாரின் வாகன சோதனையில் ஊழியர் சிக்கியுள்ளார். உணவு தருவது போல் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யும் நபர்களுக்கு மதுபானத்தை டோர் டெலிவரி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News