16 ரவுடி பட்டியல் தயார்; ஒரு வாரத்தில் கைது- சென்னை காவல் ஆணையர் அதிரடி!
ரவுடி காக்காதோப்பு பாலாஜியை கைதுசெய்துள்ளோம். மேலும் 16 ரவுடிகளை கைது செய்ய உள்ளோம் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் கூறினார்.;
தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. எனவே கடைகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பெருநகரசென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் கூட்டம் அதிகரிக்க கூடும். இதனால் கொரோனா தொற்று பரவிவிடக்கூடாது என்பதற்காக கடையில் இருந்து சுமார் 50 மீட்டர்க்கு காவல் துறை சார்பில் சாலை தடுப்புகள் அமைத்துள்ளோம். சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக வளையம் வரைந்து கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரவல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி கைது குறித்து பேசிய அவர் சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் இன்று காலை நான்கு மணி அளவில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை கைது செய்தோம். இவர்மீது ஆறு கொலை வழக்குகள் உட்பட 55 வழக்குகள் உள்ளன.
இதுபோல் 16 ரவுடிகளின் பட்டியலை தயார் செய்துள்ளோம். ஒரு வாரத்திற்குள் அவர்களை கைது செய்ய உள்ளோம் என்றார்.