தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மீனவர்கள் வருகிற 25ம் தேதியில் வரையில் பாதுகாப்புடன் கடலுக்கு செல்ல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Update: 2021-07-21 13:29 GMT

பைல் படம்

வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களிடம் இன்று கூறியதாவது: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், பிற மாவட்டங்களில் அநேகமாக வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும்.

இன்று முதல் 23ம் தேதி வரையில் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசம்.தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசம்.கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.தென் மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.என மீனவர்கள் வருகிற 25ம் தேதி வரையில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News