சென்னையில் இருளர் இன மக்களுக்கு பாலபிஷேகம் செய்த பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள்

சென்னையில் இருளர் இன மக்களுக்கு காலில் பாலபிஷேகம் செய்து பேருந்தில் ஏற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-12-11 11:46 GMT

இருளர் இன மக்களுக்கு பாலாபிஷேகம் செய்த ஓட்டுநர், நடத்துனர்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பேருந்தில் ஏறி பயணம் செய்த இருளர் இனத்தை சேர்ந்தவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டு அவர்களின் உடமைகளை தூக்கி எறிந்த சம்பவம் இணையத்தில் வீடுயோவாக வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் , இன்று பெரம்பூரில் இருந்து பாரிமுனை நோக்கி சென்ற தடம் எண் 42 என்ற பேருந்து சென்டரல் மோர் மார்க்கெட் பகுதியில் நின்றது.

அப்போது இருளர் இனத்தை சேர்ந்த 2 பேர் பேருந்தில் ஏறினர். அப்போது பேருந்து ஓட்டுனர் அப்துல் மன்னன் (60) என்பவர் அவர்களை பேருந்து உள்ளே வரும் படி கூறி உட்கார இருக்கை தந்தார்.

மேலும் அவர்கள் பாரிமுனை செல்ல வேண்டும் என்று கூறினர். அவர்களை பாரிமுனையில் இறக்கி விட்ட அப்துல் மன்னன், நடத்துனர் மோகன் ஆகியோர் அவர்கள் எங்கே செல்ல வேண்டும் என்று விசாரித்தனர்.

அப்போது அவர்கள் பெரம்பூர் வீனஸ் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர். அங்கிருந்த பேருந்து தடம் எண் 242 நிற்கும் இடத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு அப்துல் மன்னன் , மோகன் ஆகியோருடன் 242 பேருந்தின் ஓட்டுனர் சதிஷ் பாபு , நடத்துனர் பூமணி ஆகிய 4 பேரும் சேர்ந்து இருளர் இனத்தை சேர்ந்த கணவன் மனைவி இருவருக்கும் காலில் பால் அபிஷேகம் செய்து தோலில் மாலை அணிவித்து குங்குமம் வைத்து பேருந்தில் ஏற்றினர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், சமீப காலமாக பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் குறித்து ஒரு தவறான கண்ணோட்டம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருவதால், அதனை போக்கவும் அனைத்து பயணிகளும் சமமுடன் நடத்துவதற்காகவும் இது போன்று செய்ததாகவும் மற்றபடி இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் கூறினார்கள்.

மேலும் யாரோ ஒருவர் தவறு செய்வதால் ஒட்டுமொத்த பேருந்து நடத்துநர் ஓட்டுநர்களையும் பொதுமக்கள் தவறாக நினைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.

Tags:    

Similar News