வியாசர்பாடியில் பண பிரச்சனையால் தம்பியை கொலை செய்த அண்ணன்
வியாசர்பாடியில் பண பிரச்சனையால் அண்ணனே தம்பியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஈஸ்வரி 55. இவரது மகன்கள் கோகுல கண்ணன் 33, வினோத்குமார் என்கின்ற வெள்ளை 31.
இந்நிலையில், கோகுலக்கண்ணன் தனது இருசக்கர வாகனத்தை பழுது நீக்குவதற்காக தனது நண்பரிடம் 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அதனை வீட்டிற்கு எடுத்துவந்து வைத்துள்ளார். இதனைப் பார்த்த அவரது தம்பி வினோத்குமார் அந்தப் பணத்தை திருடிச் சென்று குடித்துவிட்டு தனது நண்பர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
நேற்று இரவு முழு குடிபோதையில் வினோத்குமார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த கோகுல் மற்றும் அவரது தாய் ஈஸ்வரி ஆகிய இருவரும் வினோத்குமாரிடம் பணம் எடுத்தியே எப்போது தருவாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
கடும் வாக்குவாதம் முற்றி ஒருகட்டத்தில் கோகுலக்கண்ணன் வினோத்குமாரை சரமாரியாக அடித்துளளார். இதில் வினோத்குமார் வீட்டிலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார்.
பின்னர், கோகுலக்கண்ணன் மற்றும் தாய் ஈஸ்வரி இருவரும் தூங்க சென்று விட்டனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வினோத்குமார் ரத்த காயங்களுடன் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். உடனே இது குறித்து அவர்களது உறவுக்காரப் பெண்ணான ஒருவரை வரவைத்து வினோத்குமாரை பரிசோதனை செய்தபோது அவர் இறந்துவட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்ட கோகுல கண்ணன் மற்றும் அவரது தாயார் ஈஸ்வரி இருவரும் செய்வதறியாது திகைத்தனர்.
அதற்குள் விஷயம் வெளியே தெரியவர அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த எம்கேபி நகர் போலீசார் வினோத் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் வினோத் குமார் நேற்று குடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது ரத்த காயத்துடன் வந்தான். யாரோ அவனை அடித்து விட்டார்கள் என்று ஈஸ்வரி மற்றும் அவரது மகன் கோகுல் தெரிவித்துள்ளனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் இரவு கோகுலக்கண்ணன் வினோத்குமாரை அடித்து ரத்த காயத்தை உண்டாக்கியது தெரியவந்தது.
அதன்பிறகு போதையில் அனைவரும் தூங்கிவிட்ட பிறகு மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது வினோத்குமார் இறந்துள்ளதை கோகல கண்ணன் மற்றும் ஈஸ்வரி ஆகிய இருவரும் தெரிந்து கொண்டனர். அதன்பிறகு வினோத்குமாரின் ரத்த காயங்கள் அனைத்தையும் தண்ணீரால் துடைத்து அவரது உடைகளை கழட்டி வேறு உடைகளை மாற்றி தற்செயலாக குடிபோதையில் இறந்தது போல பொது மக்களை நம்ப வைக்க முயற்சி செய்துள்ளனர்.
அதற்குள் விஷயம் வெளியே தெரிந்து போலீசார் சென்று அனைத்தையும் கண்டு பிடித்துவிட்டனர் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து கொலையாளி கோகுல கண்ணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் ஈஸ்வரி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.