முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம், அதிரடியாக தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை தலைமை செயலகத்தில் நடந்த மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அதிரடியாக 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Update: 2021-07-12 17:45 GMT

சென்னையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி தொல் திருமாவளவன் பேட்டியளித்தார்.

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை யில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர், 

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியதாவது:

முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி கண்டனத்திற்குரியது, ஒன்றிய அரசு அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது, மேகதாது அணை பிரச்சனையில் அனைத்துக் கட்சிகளின் முழு ஒத்துழைப்பு தருவது, அனைத்து கட்சி பிரதிநிதிகளும் ஒன்றிய அரசை சந்திப்பது என மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது

இந்த பிரச்சனையில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி முழு ஒத்துழைப்பை நல்கும் மேகதாதுவில் அணை கட்டுவது இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது

தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால நலனை சீர்குலைக்கும் முயற்சி அதனை முழுமையாக எதிர்ப்போம் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேகதாது பிரச்சினை குறித்து கேள்வி எழுப்புவோம் என தெரிவித்தார்

Tags:    

Similar News