6 மாணவர்கள் தொடர்ந்து 12 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 6 மாணவர்கள் தொடர்ந்து 12 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனைப் படைத்தனர்.;

Update: 2021-12-05 06:48 GMT

தமிழக முதலமை்ச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்  ஆறு மாணவர்கள் தொடர்ந்து பன்னிரெண்டு மணி நேரம் சிலம்பம் சுற்றினர்.

தமிழகஅரசு விளையாட்டுத்துறையில் சிலம்பக்கலையில் சிறந்து விளங்கும் மாணவ மாணவியருக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என சமீபத்தில் அறிவித்தது இதனையடுத்து பல்வேறு சிலம்பக்கலை சங்கங்களும் தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சீறும் சிலம்பம் பாரம்பரிய விளையாட்டு கழகம் சார்பில சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6 மாணவர்கள் சேர்ந்து இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என தொடர்ந்து இடைவிடாமல் 12 மணி நேரம் சிலம்பம் சுற்றி தமிழக முதல்வருக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர். மேலும் இதில் சிறப்பு அம்சமாக பிரணவ் என்ற 3 வயது சிறுவன் மூன்று மணி நேரம் தொடர்ந்து இடைவிடாமல் சிலம்பம் சுற்றி தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்

பாரம்பரிய கலையான சிலம்பக் கலையை தற்போது உள்ள இளைஞர்கள் அதிகமாக விரும்புவது கிடையாது என்ற ஒரு சூழ்நிலை இருந்துவரும் நிலையில் பாரம்பரிய கலைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக முதல்வர் 3 சதவீத இட ஒதுக்கீடு என அறிவித்துள்ளது சிலம்பக்கலைக்கு உயிர் கொடுத்துள்ளதாகவும் எனவே சிலம்பக்கலைக்கு உயிர் கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சாதனை நிகழ்த்த படுவதாகவும் சிலம்பக்கலை ஆசான்கள் தெரிவித்தனர்.

தற்போது நிகழ்த்தப்படும் இந்த சாதனையானது ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய சாதனை புத்தகங்களில் இடம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News