வேலையற்ற 50 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.1.50 கோடி மானிய கடன்
வேலையற்ற 50 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.1.50 கோடி மானிய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.;
தமிழக வேலையற்ற இளைஞர்களை தொழில் முனைவோராக்கிட நடப்பு ஆண்டில் 50 தொழில் முனைவோருக்கு ரூ.1.50 கோடி ரூபாய் வரையில் மானிய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேலையற்ற இளைஞர்களை தொழில் முனைவோராக்கிட, பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, மாவட்ட தொழில் மையம் மூலமாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில், நடப்பு ஆண்டில் சுமார் 50 தொழில் முனைவோருக்கு கடன் மானியத் தொகையாக ரூ.1.50 கோடி ரூபாய் வரையில் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி தொடர்பான தொழில்களுக்கு, ரூ.25 லட்சமும், சேவை தொழில்களுக்கு, ரூ.10 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படும். மானியத் தொகை பெற விரும்புவோர், www.kviconline.gov.in என்ற இணையதளம் மற்றும் 044 - 2250 1621 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.