நாக்பூரிலிருந்து சென்னை வந்தடைந்தது ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள்!

Update: 2021-05-16 05:56 GMT

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இதனால் தற்காலிகமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே பல்வேறு நாடுகளில் இருந்து ஆக்சிஜன் இந்தியாவுக்கு வந்த வண்ணம் உள்ளது.

இதேபோல் தமிழகத்திலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  தமிழக அரசு ஆக்சிஜன் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. 

அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து இந்திய விமானப்படை விமானத்தில் 20 ஆக்ஜிசன் தயாரிக்கும் கருவிகள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சோந்தது. விமான நிலைய அதிகாரிகள் அவற்றை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.


Tags:    

Similar News