கொரோனா பரவல்: 3000 சதுரடி பரப்பளவு உள்ள கடைகளை மூட உத்தரவு

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், 3000 சதுரடி பரப்பளவுள்ள கடைகளை மூடுமாறு, தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-04-28 07:39 GMT

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு என பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, வணிக வளாகங்கள், தியேட்டர்கள் ஆகியன, மறு உத்தரவு வரும் வரை மூட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்க்கும் வகையில்,  3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூடுவதற்கு தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன்உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ராஜீவ் ரஞ்சன் அனுப்பிய கடிதத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News