சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
சென்னை: வளசரவாக்கத்தில் பெருநகர குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியம் சார்பில் தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.;
சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் ஹரிகரன் உத்தரவு பேரில் வளசரவாக்கம் பகுதி அலுவலகம் சார்பில் வளசரவாக்கம் சென்னை குடிநீர் வாரிய தொழிலாளர்கள், லாரி ஓட்டுனர்கள், கிளினர்கள், மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வளசரவாக்கம் பகுதி பொறியாளர் ராஜாராமன் தலைமை தாங்கினார். உதவி பகுதி பொறியாளர் சரவணன் முன்னிலை வகித்தார். சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடக்கமாக பகுதி பொறியாளர் ராஜாராமன் குடிநீர் வாரிய தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசங்களை வழங்கினர்.