சென்னையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் தொடர் உண்ணாவிரதம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி, சென்னை தேனாம்பேட்டையில் செவிலியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.;
கொரோனா தொற்றின் போது கூடுதல் பணிக்காக, மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல், செவிலியர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் 1,212 ஒப்பந்த முறை செவிலியர்களை பணி நியமனம் செய்தது. மீதமுள்ள 3,485 செவிலியர்கள் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடந்த 2 மாதங்களில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான செவிலியர்கள், பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். உணவு தங்கும் வசதி ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசு அறிவித்த ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், இதில், கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை துச்சமென்று நினைத்து உழைத்த தங்களை, உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தொடர் உள்ளிருப்பு போராட்டம், மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில், செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர்.