இனி பள்ளிக்கு வர தேவையில்லை - பள்ளிக் கல்வித்துறை

Update: 2021-04-17 05:12 GMT

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒன்றாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வின்றி ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது.

12ஆம் வகுப்புக்கு மட்டும் மே 3 ஆம் தேதி தேர்வு வைக்க பட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக மே மாதம் 31 ஆம் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இதனையடுத்து நேற்று 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு தொடங்கியது. அவர்களில் செய்முறைத் தேர்வு இல்லாத மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

செய்முறைதேர்வு இருக்கும் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்றும், அவர்களுக்கு செய்முறை தேர்வு முடியும் அடுத்த நாளில் இருந்து படிப்பதற்கான விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News