சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம்: தமிழ்நாடு அரசு அனுமதி
சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம் என்று, தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
சுற்றுசூழல் அனுமதி பெற்று தான் மண் எடுக்க வேண்டும் என்று கடந்த ஜூலையில் தமிழக அரசு அறிவித்த நிலையில் தற்போது அதற்கான தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மண்பாண்டத் தொழில் செய்வோா், செங்கல் சூளை வைத்திருப்போா், நிலங்களை மேம்படுத்த வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள், சாலை மேம்பாடு செய்வோா் ஆகியோா் மண் எடுக்க அனுமதி தேவையில்லை என்று அறிவித்தார்.
இந்நிலையில், செங்கல் சூளை வைத்திருப்போர் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அரசாணையில் திருத்தம் செய்து, மண் எடுப்பதற்கான தடையை அரசு நீக்கியது. தமிழ்நாடு அரசு. மண்பாண்ட தொழிலாளர்கள் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம் என்றும் 1.5 மீட்டர் வரை மண் எடுக்க அனுமதி வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது.