காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்குப்பதில் புது தேர்வு முறை: அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு பதிதலாக புது தேர்வு முறை அறிமுகம்.
தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் கிடையாது. அதற்கு பதிதலாக இந்தாண்டு புது தேர்வு முறையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அறிவித்துள்ளார்.
திட்டமிட்டபடி நவம்பர் 1ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார். காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இந்தாண்டு நடத்துவதற்கான வாய்ப்பில்லை என்று கூறிய அவர் டிசம்பர் மாதத்தில் ஒருங்கிணைந்த முறையில் ஒரே ஒரு தேர்வை மட்டும் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் நீண்ட நேரம் மாஸ்க் அணிந்து வகுப்புகளில் தொடர்சியாக அமர்வது என்பது கடினமான ஒரு சூழ்நிலையாக இருக்கும். எனவே, பெற்றோர்கள் விரும்பினால் ஒரு மணி நேரத்தில் கூட பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்லலாம்.
அதேநேரத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.