சென்னை அண்ணாசாலையில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி
சென்னை அண்ணாசாலையில், நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சியை, அமைச்சர் தா மோ அன்பரசன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு கைத்தறி தொழில் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பாக, நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி, சென்னை அண்ணாசாலையில் நடைபெற்றது. கண்காட்சியை, ஊரக தொழில்துறை அமைச்சர் தா மோ அன்பரசன், குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.
இன்று தொடங்கி, ஒரு மாதம் வரை கொலு பொம்மைகள் விற்பனை நடைபெற இருக்கிறது. பொம்மைகளின் உயரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் வாங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் கைவினைத் தொழில்கள் கலைஞர்கள் செய்த பொருட்கள், விற்பனை செய்யாமல் தேங்கின.
இந்த ஆண்டு, நவராத்திரியை முன்னிட்டு அவர்களால் உருவாக்கப்பட்ட பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 75 இடங்களில் அரசு சார்பாக விற்பனை கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது என்று, அமைச்சர் தா மோ அன்பரசன் தெரிவித்தார்.