தேசிய திருநங்கைகள் தினம்: சென்னையில் கொண்டாட்டம்!

Update: 2021-04-15 14:41 GMT

கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி உச்சநீதிமன்றம் திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்ற அங்கீகாரம் கொடுத்து தீர்ப்பு வழங்கியது. இந்த நாளை ஆண்டு தோறும் தேசிய திருநங்கையர் தினமாகக் திருநங்கைகள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

சென்னை சேத்துபட்டு திருநங்கைகள் காப்பகத்தில், திருநங்கைகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் சென்னை மாநகர வீடற்றவர்களுக்கான காப்பகங்களின் ஒருங்கிணைப்பாளர் ஆஷா கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. 2021 ஆம் ஆண்டை போற்றும் வகையில் 21 மரக்கன்றுகள் நட்டு பொதுமக்களுக்கு, முகக்கவசங்கள் வழங்கினர்.

திருநங்கைகள் அனைவரும் சமூகத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும், சமூக வளர்ச்சிக்கு நாம் எந்த அளவிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags:    

Similar News