வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு

வாக்களித்த மக்களுக்கு முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.;

Update: 2021-05-25 04:00 GMT

முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ

செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர், நான்காவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகவும், தொடர்ந்து 3வது முறையாக விராலிமலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் என்னை தேர்தந்தெடுத்த மக்களுக்கு நன்றி. என் வெற்றிக்காக உழைத்த அதிமுக தொண்டர்களுக்கும் நன்றி என தெரிவித்தார். ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகவும், தொகுதியின் பிரச்சனைகள் சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்க செய்வேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, 3வது முறையாக என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி. தேர்தலின் போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அனைத்தும் நிறைவேற்றப்படும். அதேநேரத்தில், சிறப்பான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் அதிமுகவின் செயல்பாடு இருக்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News