டிடிவி தினகரன் மகள் திருமணம் கட்சியினர் ஏமாற்றம்

TTV Dhinakaran Daughter Marriage-டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணியின் திருமணம் 16ம் தேதி நடக்க உள்ளது. கட்சியினர் யாரும் நேரில் வரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-09-13 04:22 GMT

TTV Dhinakaran Daughter Marriage

TTV Dhinakaran Daughter Marriage-தினகரன் வெளியிட்ட அறிக்கை :என் மகள் ஜெயஹரிணிக்கும், ராமநாத துளசி அய்யா வாண்டையாருக்கும், வருகிற 16ம் தேதி, திருவண்ணாமலையில் திருமணம் நடைபெறவுள்ளது. கட்சியினர் அனைவரும் குடும்பத்தினரோடு வந்திருந்து, திருமணத்தை நடத்த வேண்டும் என்பதே என் விருப்பம். எனினும், கொரோனா பேரிடர் பாதிப்பு, இன்னும் முழுமையாக விலகாத நிலையில், உங்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் முக்கியம்.

அதனால், தங்கள் அனைவரின் முன்னிலையில் திருமண விழாவை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது.இல்லறம் ஏற்கும் மணமக்கள் பல்லாண்டு காலம் சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட, தங்களின் மனப்பூர்வமான அன்பையும், இதயம் நிறைந்த வாழ்த்துகளையும் தந்திட வேண்டுகிறேன்.

இறையருளால் கொரோனா சூழல் மாறியவுடன், நல்விருந்து ஒன்றில் சந்திப்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். முக்கிய நிர்வாகிக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News