தமிழகத்தில் 3 நாட்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு வராது, அமைச்சர் தகவல்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2021-07-21 13:20 GMT

பைல் படம்

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை மத்திய பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் சந்தித்து, தமிழகத்தில் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 83 லட்சத்து 56 ஆயிரத்து 631 தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு 17 லட்சம் வந்துள்ளது. தமிழகத்தில் 3 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது.

இந்தியாவிலேயே முதன்முறையாக சி.எஸ்.ஆர் நிதி மூலம் தனியார் மருத்துவமனைகளில், பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. அந்த திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படும். தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் 2 கோடியை நெருங்கி வருகிறது என்று கூறினார்.

Tags:    

Similar News