குடியரசு தின விழா: வண்ண மின்விளக்குகளால் ஜொலிக்கும் சென்னை விமான நிலையம்
குடியரசு தின விழாவை வரவேற்கும் வகையில் சென்னை விமான நிலையம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
குடியரசு தின விழாவை வரவேற்கும் வகையில் சென்னை விமான நிலையம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் எப்போழுதும் முக்கிய பண்டிகைகளை பயணிகளுடன் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கமான ஒன்று அதுபோல் 73 -வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனால் சென்னை உள்நாட்டு முனையம் மற்றும் பன்னாட்டு விமான நிலையம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வண்ண விளக்குகளால் மிளிர்வதை பார்க்கும் பயணிகள் தங்கள் கைப்பேசிகளில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் ஒவ்வொரு முக்கிய பண்டிகையிலும் விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுடன் இணைந்து கோலாகலமாக கொண்டாடுவது வழக்கமானது ஆனால் இந்த வருடம் கரோனா வைரஸ் காரணமாக சில முக்கிய அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டு கொடி ஏற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீசார் 24 மணி நேரமும் விமான நிலையத்தை சுற்றி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சென்னை விமான நிலையத்தில் நுழையும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி கடுமையான சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர். அதேபோல் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி வரும் வாகனங்களையும் சோதனைக்கு பின்னரே அனுப்பி வைக்கின்றனர்.
மேலும் வெடிகுண்டு கருவிகளாலும் பயணிகளின் உடமைகளை மோப்ப நாய்களை வைத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இதனால் சென்னை விமான நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது.