5 ஆண்டுகளுக்கு மேல் கோவில்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம், அமைச்சர் சேகர் அறிவிப்பு

தமிழக கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக ஊழியர்களாக பணி புரிந்து வருபவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-01 17:43 GMT

சென்னையில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை : தமிழக கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக ஊழியர்களாக பணி புரிந்து வருபவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெறும் அன்னதானத் திட்டப் பணிகளை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் 3,700 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் சொத்துகள் மீட்கப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதுகுறித்த பட்டியலை வெளியிட முடியுமா..? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, கோயில் பணியாளர் நியமனம் தொடர்பான சர்ச்சை குறித்து விளக்கமளித்தார். அப்போது, தமிழகத்தில் உள்ள கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேல் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றுவோர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்" என்று  தெரிவித்தார்.

Tags:    

Similar News