இந்தியாவில் முதன்முறையாக மலக்குடல் புற்றுநோய்க்கு ரோபோ உதவியுடன் அறுவைசிகிச்சை
மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, 'ரோபோ' உதவியுடன் தனியார் மருத்துவமனை டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு அளித்துள்ளனர்.;
பைல் படம்.
வங்கதேசத்தை சேர்ந்த சுமார் 55 வயது மதிப்புடைய பெண், மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சென்னை, தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், புற்றுநோயை குறைப்பதற்கு, 'ரேடியோ தெரபி'யுடன் சேர்த்து, கீமோதெரபி சிகிச்சையும் அளித்தனர்.
இந்தியாவில் முதன் முறையாக, மலக்குடல் புற்றுநோய்க்கு, 'லோ ஆன்டீரியர் ரீசெக் ஷன்' எனப்படும், 'ரோபோ' உதவியுடன், புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது.
சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை இரைப்பை குடல் புற்றுநோய் துறை நிபுணர் டாக்டர் அஜித்பை கூறுகையில், நோயாளிக்கு அறுவை சிகிச்சையை எளிதாகவும் செய்ய, 'ரோபோடிக் ஸ்டேப்ளர்' பெரிதும் உதவியது. மேலும், அறுவை சிகிச்சை செய்யப்படும் நேர அளவையும் கணிசமாக குறைத்துள்ளது என்றார்.