நாளை முதல் ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி

நாளை முதல் வருகிற 30ம் தேதி வரை, ஐந்து நாட்கள் ஆசிரியர்களுக்கான இணையதள வழி அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு அளிக்கப்பட உள்ளது.

Update: 2021-07-25 09:55 GMT

பைல் படம்.

தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான இணையதள வழி அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு நாளை தொடங்கப்பட உள்ளது.

'ஹைடெக்' ஆய்வகங்கள் ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ள, அடிப்படை கம்ப்யூட்டரை கையாளுதல், இணையதளத்தை மேம்படுத்துதல், 'ஹைடெக்' ஆய்வகங்கள் ஆகியவற்றில், திறன் வளர் பயிற்சி அளிக்க, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பயிற்சிக்கு தேவையான வீடியோக்கள், மதிப்பீட்டு வினாக்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இவற்றை வைத்து, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வழியே ஆசிரியர்களுக்கு நாளை முதல் வருகிற 30ம் தேதி வரை, ஐந்து நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

Tags:    

Similar News