மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாடு, ஆன்லைனில் நேரடி ஒளிபரப்பு!
கொரோனா பரவல் காரணமாக சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாடு ஆன்லைனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்திலும் பக்தர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு பிரசித்தி பெற்ற ஆலயங்களின் முக்கிய பூஜை வழிபாடுகள் அனைத்தும் நேரலை மூலம் மக்களுக்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவொற்றியூர், திருவேற்காடு, போன்ற பல பிரசித்தி பெற்ற ஆலயங்களின் பிரதோஷ வழிபாடு ஆன்லைனில் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணி அளவில் பிரதோஷ வழிபாட்டு நிகழ்ச்சி நேரடியாக ஆன்லைன் மூலம் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியை https://www.youtube.com/c/MYLAPOREKAPALEESWARARTEMPLE என்ற YouTube channel- லில், பக்தர்கள் நேரலை ஒளிபரப்பு மூலம் காணலாம்.
குறிப்பாக நந்தி அபிஷேகமும் அதனை தொடர்ந்து சந்திரசேகரர் உள் புறப்பாடும் பக்தர்களின் கோரிக்கையின் படி ஒளிபரப்பப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.