சென்னை கிறிஸ்துமஸ் விழா : வி.கே.சசிகலா பங்கேற்பு
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் வி.கே.சசிகலா கலந்து கொண்டார்.;
பைல் படம்
ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் விழாவை அரசியல் கட்சிகள் சார்பில் கொண்டாடுவது வழக்கம். அதன் அடிப்படையில் வி.கே.சசிகலா இன்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லம் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு கேக் வெட்டி காப்பகத்தில் உள்ள முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறுவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்..
அப்போது அவருடன் அமமுக சார்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.