சென்னையில் இன்று முதல் கூடுதல் மின்சார ரயில்கள் இயங்கும்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
சென்னையில் இன்று முதல் கூடுதல் மின்சார ரயில்கள் இயங்கும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கில் இன்று முதல் பல்வேறு தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி சென்னையில் இன்று முதல் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில் சேவையும், தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 120 ரயில் சேவையும் என்று மொத்தமாக 323 மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.
மேலும் 20ஆம் தேதி முதல் ஞாயிறுதோறும் 98 மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.