சென்னை: அடையாறில் குடிபோதையில் கார் ஓட்டிய தொழிலதிபர் கைது!
சென்னை அடையாறில் குடிபோதையில் கார் ஓட்டி சாலை தடுப்புகளை சேதப்படுத்திய தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தேவையின்றி ஊர் சுற்றுபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நாடு முழுவதும் சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு இந்த கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை அடையாறில் நேற்றிரவு குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி, சாலை தடுப்புகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய தொழிலதிபர் ஹரேஷ் டி ஜெத்வானியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.