தீவிர சிகிச்சை பிரிவில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அனுமதி
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது மதுசூதனனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.