சென்னையில் இன்று முதல் கூடுதல் ரயில்கள் : மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

சென்னையில் இன்று முதல் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-08 04:46 GMT

சென்னை மெட்ரோ ரயில் (பைல் படம்)

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

கொரோனா பரவல் காரணமாக , 21ம் தேதி முதல், 50 சதவீத இருக்கைகளுடன் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது, கட்டுப்பாடுகளில் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில்,

பயணியரின் வேண்டுகோளிற்கு இணங்க, இன்று முதல் காலை 5:30 மணி முதல், இரவு 9:00 மணி வரை, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

காலை 8:00 மணி முதல் 1:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும், ஐந்து நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.

மற்ற நேரங்களில், 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். பயணியர் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணியாதோருக்கு 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News