துப்புரவு பெண் பணியாளரின் நேர்மையை பாராட்டி நடிகர் எஸ்.வி.சேகர் பரிசளிப்பு
துப்புரவு பணியாளர் பெண்ணின் நேர்மைக்கு ஊக்கத்தொகையை கொடுத்த உற்சாகப்படுத்தி நடிகர் எஸ்.வி.சேகர்.;
அன்புள்ள, மரியாதைக்குரிய மேரி அவர்களுக்கு வணக்கம்.
துப்புரவுப் பணியாளரான உங்கள் நற்செயலை பாராட்டவே இக்கடிதம். தவறுதலாக குப்பையில் போடப்பட்ட 100 கிராம் எடையுள்ள, ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை, குப்பையை பிரிக்கும் போது கண்டுபிடித்த நீங்கள், போலீசாரை உடனடியாக தொடர்பு கொண்டு அந்த தங்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த நல்ல மனத்தையும், குணத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பணமே முக்கியம், நேர்மையாக. வாழ்வது மிகக்கடினம் என நினைக்கும் இக்காலத்தில், வறுமையிலும், ஏழ்மையிலும் அடுத்தவர் பொருள் நமக்கு வேண்டாம் என நினைத்த உங்களின் மிகப்பெரிய நேர்மையான இச்செயலை பாராட்டி என் தொண்டு நிறுவனத்தின் மூலமாக ரூபாய் 5000/- தங்களுக்கு வழங்குவதில் பெருமை அடைகின்றேன்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் அனைத்து செல்வங்களையும், நோயற்ற வாழ்வையும் வழங்க ஆண்டவனை வேண்டுகின்றேன். என நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்திருந்தார்.