சென்னை விமானநிலையத்தில் வெளிநாட்டு பணம் கடத்த முயன்ற 7 பேர் கைது

சென்னை விமானநிலையத்தில் வெளிநாட்டு பணம் கடத்த முயன்ற 7 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Update: 2021-12-24 14:35 GMT

சென்னை விமானநிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்த இருந்து வெளிநாட்டு பணம்.

சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஃபிளை துபாய் ஏா்லைன்ஸ் விமானம் சென்னை சா்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்பட தயாராக இருந்தது.அந்த விமானத்தில் சில பயணிகள் வெளிநாட்டு கரசிகளை உள்ளாடைகளுக்குள் மறைத்து கடத்துவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையான DRI க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து DRI தனிப்படையினா் சென்னை சா்வதேச விமானநிலையம் விரைந்து வந்தனா்.அவா்களுடன் விமானநிலைய சுங்கத்துறையினரும் சோ்ந்து,அந்த விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளையும் சோதனையிட்டனா்.

அப்போது அந்த விமானத்தில் ஒரு குழுவாக பயணித்த சென்னையை 7 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.அவா்களை தனியாக அழைத்து சென்று சோதனையிட்டனா்.அவா்களின் உள்ளாடைகளுக்குள் கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருந்தனா்.

சவுதி ரியால் மற்றும் அமெரிக்க டாலா் வெளிநாட்டு பணம், இந்திய மதிப்பிற்கு மொத்தம் ரூ.58.53 லட்சம் இருந்தது.இதையடுத்து அதிகாரிகள் அநத பணத்தை பறிமுதல் செய்தனா்.அதன்பின்பு 7 பேரின் விமான பயணங்களை ரத்து செய்தனா்.அதோடு வெளிநாட்டு பணத்தை துபாய்க்கு கடத்த முயன்ற 7 பயணிகளையும்,சுங்கத்துறையினா் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Tags:    

Similar News