பழனிசாமி முன்னிலையில் 470 பேர் அதிமுகவில் இணைந்தனர்

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி முன்னிலையில்,470 பேர் அதிமுகவில் இன்று இணைந்தனர்.;

Update: 2022-01-04 11:55 GMT

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், திருப்போரூர் ஒன்றிய மதிமுக செயலாளர் சுரேஷ் தலைமையில், மதிமுகவைச் சேர்ந்த 200க்கும் அதிகமானவர்கள் நேரில் சந்தித்து, அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இதைப் போல் செங்கல்பட்டு மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் கடலுார் கோதண்டம் தலைமையில் 200 பேரும், திருப்போரூர் பேரூராட்சி ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் தயாநிதி தலைமையில் 20 பேரும், அமமுக செங்கல்பட்டு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் 50 பேர் என சுமார் 470 பேர் அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

புதிய நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.இதில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், மகளிர் அணி இணைச் செயலாளர் மரகதம் குமரவேல் ஆகியோரும் உடனிருந்தனர்.

Tags:    

Similar News