மாணவிகள் துன்புறுத்தல்.. முன்னாள் மாணவர்கள் 900 பேர் புகார்..!
சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவிகள் துன்புறுத்தல்... முன்னாள் மாணவர்கள் 900 பேர் புகார்;
சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக முன்னாள் மாணவர்கள் 900 பேர் கூட்டாக புகார் அளித்துள்ளனர்.
சென்னை அண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி நகரில் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இப்பள்ளியில் பாலியல் ரீதியான புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் அளித்த புகார்கள் எதுவும் இதுவரை விசாரிக்கப்படவில்லை என்று முன்னாள் மாணவர்கள் 900க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு மாநில குழந்தைகள் நல உரிமைகள் மற்றும் பாதுகாப்பு மையத்திற்கு புகாராக அளித்துள்ளனர்.
இந்த புகார் பற்றி தமிழ்நாடு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதன்படி வரும் 8ம் தேதி செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி அலுவலர்கள், ஆசிரியர்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என குழந்தைகள் உரிமை, பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்படத்தக்கது.