இனி என் அரசியல் பயணம் ஆன்மிக அரசியல் பயணம்:டி.ராஜேந்தர்

இனிமேல் என் அரசியல் பயணம், ஆன்மிக அரசியல் பயணமாக இருக்கும் என்று டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-29 08:26 GMT

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் டி.ராஜேந்தர், இனிமேல் என் அரசியல் பயணம், ஆன்மிக அரசியல் பயணமாக இருக்கும். வரும் காலத்தில் ஆன்மீக அரசியலில் தான் ஈடுபடுவேன். சினிமா, திருவிழாவுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் ஏன் இல்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தேமுதிக கூட்டணி இல்லை என்றதும் ஓபிஎஸ் என்னை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்" என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆன்மிக அரசியல் என்று கூறி கொண்டிருப்பவர்கள் ஒன்று பாஜக; மற்றொரு ரஜினி. ரஜினி அரசியலுக்கு நோ என்ட்ரி போட்டுவிட்ட நிலையில், பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் தான் ஆன்மீக அரசியலை முன்னிறுத்தி வருகிறது. அதனால் வருங்காலத்தில் டி.ஆர். திராவிடத்திலிருந்து விலகி பாஜக பக்கம் சாய்வாரா ? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News