மீலாதுன் நபி: இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

மீலாதுன் நபி பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-18 13:00 GMT

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்தநாளான 'மீலாதுன் நபி' திருநாளில்,  இஸ்லாமியச் சகோதரர்களுக்கு, எனது உளம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கனிந்த நபிகள் நாயகம் ,  இளம் பருவத்தில் துயரமிகு சூழலில் வளர்ந்திருந்தாலும், வாய்மையுடன் இறுதிவரை தனித்துவமிக்க வாழ்வு வாழ்ந்த தியாக சீலர்.

ஏழை எளிய மக்களுக்கு உணவளியுங்கள் என்ற கருணை உள்ளதிற்குச் சொந்தக்காரரான அவர், தணியாத இரக்கமும் அன்புமிக்க அரவணைப்பும் கொண்டவர். உயரிய நற்சிந்தனைகள் பல உலகெங்கும் பரவிட தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது போதனைகளும் அறிவுரைகளும் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய கருத்துக் கருவூலங்கள். இஸ்லாமியச் சமுதாயப் பெருமக்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News