தெலங்கானா மாநில முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்

Update: 2022-02-17 11:33 GMT

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் க்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி.

மாநிலத்தின் உரிமைக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும் தொடர்ந்து போராடி வரும் தலைவரான தெலங்கானா மாநில முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள கூட்டாட்சித் தன்மையையும், மாநிலங்களின் மாண்பையும் பாதுகாக்க நாம் அனைவரும் இணைந்து பாடுபடுவோம். என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News