அடுத்த மெகா தடுப்பூசி முகாம் எப்போது? அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்
மெகா தடுப்பூசி முகாமுக்கு மக்கள் பெருமளவில் வரவேற்பு தந்துள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.;
தமிழகத்தில் நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமிற்கு, மக்கள் பெருமளவில் வரவேற்பு தந்துள்ளதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து, சென்னையில் அவர் கூறியதாவது:
மத்திய அரசிடம், 50 லட்சம் தடுப்பூசிகள் கேட்டிருந்தோம். 28 லட்சம் தடுப்பூசிகளே கிடைத்தன. தமிழகம் கேட்டது போல 50 லட்சம் தடுப்பூசிகள், இந்த வாரத்தில் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டால், நான்காவது மெகா தடுப்பூசி முகாம் தொடர்பான அறிவிப்பு இன்னும் 2 நாட்களில் வெளியாகும்.
தடுப்பூசி செலுத்துவதை திருவிழாவைப் போல், தமிழகம் முழுவதும் கொண்டாடி இருக்கிறார்கள். மக்களே, சாரை சாரையாக வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டார்கள். அதனால் அவர்களை கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக கட்டாயப்படுத்தினால், அதில் தவறும் இல்லை என்று, அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.