உதய சூரியன் வடிவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம்: ஓ.பி.எஸ் பாராட்டு

என் தந்தை தீவிரமான கலைஞரின் பக்தர்; அவருடைய பெட்டியில் மனோகரா, பராசக்தி கதைகள் இருக்கும். அவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பார் -ஓ.பி.எஸ்;

Update: 2021-08-24 11:48 GMT

உதய சூரியன் வடிவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் ( மாதிரி )

கலைஞருக்கு நினைவிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பை அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்க கடமைப்பட்டுள்ளோம் என எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து சட்டசபையில் அவர் கூறியதாவது:

கலைஞரின் வசனத்தில் அனல் பறக்கும், பின்னடைவில் உள்ள சமூகத்தை முன்னேற்ற அது எப்போதும் துணை நின்றுள்ளது. என் தந்தை தீவிரமான கலைஞரின் பக்தர்; அவருடைய பெட்டியில் மனோகரா, பராசக்தி கதைகள் இருக்கும். அவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பார். அவர் இல்லாத நேரத்தில் நாங்கள் எடுத்து படித்துள்ளோம். கலைஞருக்கு நினைவிடம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி. வரலாற்றில் கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கும். முழுமனதோடு ஒருமனதாக வரவேற்கிறோம் எனவும் கூறினார்.

Tags:    

Similar News