மநீம முக்கிய நிர்வாகி திமுகவில் இணைகிறார்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகி திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2021-05-04 12:00 GMT

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து சென்னை மண்டல கட்டமைப்பு மாநில செயலாளர் பதவி வகித்த நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் சில நாட்கள் முன்பு அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து விடிவிக்கப் படுவதாக பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு அறிவித்து இருந்தார்.

இதற்கு சில நாட்களுக்கு முன்புதான் ராஜினாமா செய்யப்போவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு கமீலா நாசர் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், அண்மையில் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய நாசர் மனைவி கமீலா, கட்சியிலிருந்து விலகினாலும், அரசியலை விட்டு விலக வில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் நேற்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால் கமீலா நாசர் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.

Tags:    

Similar News