எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம்தென்னரசு பதில்

குட்கா விற்பனைக்கு தமிழகம் முழுவதும் பிரபல படுத்தப்பட்ட ஆட்சி என்று சொன்னால் அது கடந்த அதிமுக ஆட்சி என்றார் தங்கம்தென்னரசு;

Update: 2022-01-06 05:45 GMT

அமைச்சர்  தங்கம்தென்னரசு

எல்லோருக்கும் முன்மாதிரியான நிர்வாகத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கி வருகிறார் என  அமைச்சர் தங்கம்தென்னரசு  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.

குறைந்த காலத்தில் இந்த அரசு மிக அற்புதமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளது அவற்றில் சிலவற்றை சுட்டிக்காட்டி ஆளுநர் உரை சிறப்பாக அமைந்துள்ளது மாநில கல்வி வளர்ச்சியை மேலும் உறுதி செய்யக்கூடிய வகையில், மாநிலக் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றும் நிறுவனங்கள் மிகச்சிறந்த அளவிலே  மாற்றுவதற்கான பெருந்திட்டம் 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும்.  20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த ஆண்டு அத்தனை பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. புதிய பள்ளிக் கட்டிடங்கள் உருவாக்கப்படும், உயர்தர ஆய்வகங்கள் உருவாக்கப்படும் என்றெல்லாம் கல்வி வளர்ச்சி ஊக்கத்தையும் கொடுத்துள்ளது.

பல்வேறு முக்கியமான திட்டங்களை அடங்கிய சிறப்பு மிக்க இந்த ஆளுநர் உரையை அதிமுக அரசு புறக்கணித்து உள்ளது.எடப்பாடி கொடுத்திருக்கும் பேட்டியை பார்க்கும் போது சிரிப்பதா அழுவதா எனத்தெரியவில்லை.திமுக ஆட்சியில் போதை குட்கா பொருட்கள் விற்பனை அதிகரித்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.  ஆனால் குட்கா விற்பனைக்கு தமிழகம் முழுவதும் பிரபல படுத்தப்பட்ட ஆட்சி என்று சொன்னால் அது கடந்த அதிமுக ஆட்சி.

போதைப் பொருட்களை பற்றி பேசுவதற்கு அதிமுகவுக்கு தகுதி இல்லை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். பொள்ளாச்சி விவகாரங்களை மறைத்துவிட்டு அவற்றுக்கெல்லாம் தீர்வு காணப்பட்டது என்பதை எடப்பாடி தெளிவுபடுத்த வேண்டும். பொள்ளாச்சி  விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை கூற வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டது எடப்பாடி அரசு. ஆனால் திமுக அரசு துப்பாக்கி கலாசாரம் தலை தூக்கி உள்ளதாக பொய் கூறுகிறார். வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல் அமைச்சரை நேரில் சென்று போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு தேர்தல் விரைவில் வரப்போகிறது என்ற அடிப்படையில்தான், அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதற்கு முன்பு பொங்கலுக்கு அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகையாக பணம் வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.

Tags:    

Similar News