மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு சிகிச்சை - அறிக்கை வெளியிட்ட நிர்வாகம்
சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, இன்று வழக்கமான மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.;
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், இன்று மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றன.
இதுதொடர்பாக, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, இன்று காலை எங்களது மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனை நடைபெற்றது. ஆண்டுக்கு இரண்டு முறை மேற்கொள்ளப்படும் பரிசோதனையை முடித்துக் கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமுடன் வீடு திரும்பினார் என்று தெரிவித்துள்ளது.