குட்கா, பான்மசாலா விற்பனை செய்தால் கடும் நடிவடிக்கை, அமைச்சர் எச்சரிக்கை

குட்கா, பான்மசாலா விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

Update: 2021-07-22 17:59 GMT

சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் புகையிலை ,குட்கா இல்லாத மாநிலமாக உருவாக்க ஆலோசனைக்கூட்டம் சுகாதாரத்துறை மா.சுப்ரமணியன் தலைமையில்  நடைபெற்றது .

இதில் மாநகராட்சி அதிகாரிகள், உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள், காவல்துறை, வணிகர் சங்கம் , மருத்துவத்துறை என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியதாவது.

புகையிலை இல்லா மாநிலம் தமிழ்நாடு. என்று உருவாக நாம் ஒன்றிணைவது அவசியம்.. தமிழ் நாடட்டிலுள்ள எந்த கடைகளிலும் தடைச்செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கண்டறியபட்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

முதல் முறை நோட்டீஸ் இரண்டாவது முறை அபராதம் அடுத்ததாக சீல் வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்..வியாபாரிகளை மாவட்டம் தோறும் ஒன்றிணைத்து உறுதிமொழியை எடுக்க வைக்கவேண்டும் .

புகையிலை ஒழிப்பு தினத்தன்று முழுமையாக புகையிலை ஒழிப்பு செய்த மாவட்டங்களுக்கு முதல்வர் மூலமாக பாரட்டுச்சான்றிதழ் வழங்கப்படும்..

கொரோனா தடுப்பூசி 2கோடி என்ற இலக்கை இன்று எட்டியுள்ளது மாணவர்கள் பயன்டுத்தும் நோட்டுபுத்தகங்களில் புகையிலை தொடர்பான நிறுவனங்களின் பெயர் இருந்தால் அதை தவிர்த்து விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற வழிவகைச்செய்யப்படும்..

கட்டுப்படுத்தவே முடியாமல் இருக்கும் மாவடங்களில் அதிகாரிக்ள் மீது விசாரித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இரண்டு மாதங்களில் புகையிலை குட்கா பொருட்களை கட்டுபடுத்த முழு நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

இரயிலில் எடுத்து வந்ததாலும் தெரியவரும் பட்சத்தில் புகார் அளிப்பவர்கள் விபரம் வெளியே தெரிவிக்கப்படாது 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் அனுப்பலாம்.

புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மட்டுமல்லாமல் எங்கிருந்து வருகிறது என தெரியும்பட்சத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News